முல்லைத்தீவு, அலம்பில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கிளாய் வீதியில் அலம்பில் சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர், மாடொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானார். இவ்விபத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

