கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று வந்தபோது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று (29) வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.