தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற’ டார்க் தீம் ‘ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி , தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோடோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பொபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ்- தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ போர்க்களத்திலே இரத்த ஊற்று எடுக்குதே.. யார் பெரியவன் இங்கே போர் நடக்குதே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோயும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் சாம் சி எஸ் எழுத ,பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சாம் சி எஸ் பாடியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் அருண் விஜயின் ஒரு கதாபாத்திரத்திற்கான பின்னணி பாடலாக ஒலிக்கும் இந்தப் பாடல் பட மாளிகையில் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

