பங்காளதேஷின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தனது நாட்டின் 12 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அதன்படி, ஷாகிப் அவாமி லீக் கட்சி சார்பாக தனது சொந்த மாவட்டமான மகுரா-1 தொகுதியில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தேர்தல் ஜனவரி 7 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஷாகிப் சமீபத்தில் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வழிநடத்தினார்.
இந்நிலையில், பங்காளதேஷில் கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து அரசியலுக்கு வரும் முதல் நபர் ஷாகிப் அல் ஹசன் இல்லை. ஏற்கனவே, முன்னாள் அணித்தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா தேர்தலில் போட்டியிட்டு நரைல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அதேபோல், 2009 ஆம் ஆண்டு பிசிபி தலைவர் நஸ்முல் ஹாசன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது முடிவு, அவர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும்போது அவரது கிரிக்கெட் கடமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பங்களாதேஷ் நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பின்னர் அவர்கள் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட 6 ஓவர்கள் போட்டிகளுக்கு நியூசிலாந்திற்கு செல்ல வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை மீறி நியூசிலாந்தில் ஷகிப் விளையாட முடியுமா என்று பார்க்க வேண்டும்.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்காளதேஷ் அணி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எட்டாவது இடத்தை பிடித்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் 9 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையை மட்டுமே தோற்கடித்தனர்.

