Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் வியாழேந்திரன்

May 27, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் அதன் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது கடந்த மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரின் உரையுடன் கூட்டம் ஆரம்பமானது. அப்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட், அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

குறித்த நியமனம் ஐக்கிய தேசிய கட்சியின் சிபாரிசுக்கு அமைவாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும். சுற்று நிரூபத்திற்கு மாறாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் எதிர்ப்பினை வெளியிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, ஜனாதிபதி கடந்த காலத்தில் அரசியலமைப்புக்கு மாறாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதாகவும் அவரினாலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் தமக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தாங்கள் இந்த கூட்டத்தினை நடாத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இதற்கான பதிலை அரசாங்கத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கலந்துரையாட முடியாது என்றும் அலிசாஹீர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இங்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிநேசன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி, இதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

எனினும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு மாறாக நடைபெறும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தம்மால் கலந்துகொள்ள முடியாதென தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

7 மணி நேர நீர் வெட்டு அமுல்

Next Post

அவசரகால சட்டம் தளர்த்தப்படும் – மைத்திரி

Next Post

அவசரகால சட்டம் தளர்த்தப்படும் – மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures