Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபிநந்தன் விரைவில் பணிக்கு திரும்ப விருப்பம்

March 4, 2019
in News, Politics, World
0

விமானப்படை விமானி அபிநந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் விரைவில் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

புலவாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26-ந் தேதி பாகிஸ்தானுக்கு போய் பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்தன.

இதற்கு பழிவாங்கும் விதமாக மறுநாளில் (27-ந் திகதி) பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக அதிநவீன போர் விமானங்கள் காஷ்மீரில் புகுந்தன. ஆனால் இந்திய விமானப்படையினர் ‘மிக்-21’ ரக போர் விமானங்களில் சென்று அவற்றை விரட்டியடித்தனர். ஒரு விமானத்தை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ‘எப்-16’ ரக விமானம் ஒன்றை, வான்மோதலில் முதன்முதலாக வீழ்த்திய இந்திய விமானப்படை விமானி என்ற பெயரை அவர் தட்டிச்செல்கிறார்.

இந்த நடவடிக்கையின்போது இந்திய போர் விமானம் ஒன்று, பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஆளாகி, அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கினார். 3 நாட்களுக்கு பின்னர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை (1-ந் திகதி) இரவு விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அபிநந்தன் உடனடியாக டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார். அந்த விமானம் இரவு 11.45 மணிக்கு டெல்லி சென்றடைந்தது. அவருக்கு விமானப்படை மத்திய மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து அவர் ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டு சோதனைகள் நடந்தன. குறிப்பாக பாகிஸ்தான் பிடியில் அவர் இருந்தபோது, உடலில் ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளதா, உளவு பார்க்கும் நோக்கத்தில் அவரது உடலில் ‘சிப்’ ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் அவரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், விமானப்படை தளபதி தனோவா ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். அவரது துணிச்சலையும், மன உறுதியையும் கண்டு, நாடு பெருமைப்படுவதாக நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

இருவரிடமும் தான் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது மன ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அபிநந்தன் தெரிவித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், 2-வது நாளாக ராணுவ மருத்துவமனையில் அவருக்கு நேற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அதற்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு முகமைகளை சேர்ந்த அதிகாரிகள், அபிநந்தனை சந்தித்து பாகிஸ்தான் பிடியில் அவர் சிக்கியது தொடங்கி, விடுதலையாகி வந்தது வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றனர். அடுத்த 2 நாட்களுக்கு இந்த விசாரணை தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அபிநந்தன், நல்ல மன நிலையிலும், உற்சாகத்திலும் உள்ளார், விரைவில் அவர் பணிக்கு திரும்ப விரும்புகிறார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Previous Post

13 ஆண்டுகளுக்குப் பின் தனுஷுடன் இணைகிறார் சினேகா!

Next Post

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!

Next Post

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures