Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைவரும் திருடர்கள் என திருடன் நம்புகின்றான் – அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

November 6, 2021
in News, Sri Lanka News
0
அனைவரும் திருடர்கள் என திருடன் நம்புகின்றான் – அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப்படைத்தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துத் தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம்,  ‘திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றார்’ என்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இராணுவத்தளங்களையும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டுவருவதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அவ்வறிக்கையில் சீனா அதன் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளில் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் இராணுவத்தளங்களையும் அதற்கேற்றவாறான உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதற்கு விரும்புவதுடன் அதுகுறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனா அதன் இராணுவத்தளங்களையோ அல்லது இராணுவ ரீதியான உட்கட்டமைப்பு வசதிகளையோ நிறுவுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் ‘இலங்கையில் இராணுவத்தளத்தை நிறுவுவதற்கு சீனா திட்டமிடுகின்றதா?’ என்ற கேள்வியுடன் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையை நேற்றைய தினம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

‘திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்’ அப்பதிவில் தெரிவித்துள்ள சீனத்தூதரகம், ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டிருந்த இராணுவத்தளத்தையும் படையினரையும் அமெரிக்கா நீக்கிக்கொண்டிருந்தாலும் இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப்படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கிவருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த ‘பெறுமதிவாய்ந்தவை’ ஆகும் என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தரவுகளின் பிரகாரம் வெளிநாடுகளில் அமெரிக்காவினால் படைத்தளங்கள் நிறுவப்பட்டிருக்கும் இடங்கள் அடங்கிய உலக வரைபடமொன்றையும் சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உலகக் கிண்ண இருபதுக்கு – 20 | தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் இன்று

Next Post

தமிழர்களின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் | டக்ளஸ் வேண்டுகோள்

Next Post
தமிழர்களின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் | டக்ளஸ் வேண்டுகோள்

தமிழர்களின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் | டக்ளஸ் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures