நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரணதர பரீட்சை
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதன்காரணமாகவே நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.