நரி வலம்போனால் என்ன? இடம்போனால் என்ன? மேலே விழுந்து பிறாண்டாமல் இருந்தால் சரிதான் என சொல்லப்படும் பழமொழி போல தமிழர்களின் சமூக ஊடகங்களில் இன்புளுவன்ஸர்ஸ் எனப்படும் செல்வாக்கு செலுத்த தலைப்படும் முகங்களுக்கும் தமிழர்களை பிறாண்டக்கூடாது என சொல்லிக்கொள்ளவும் அறிவுரை தேவைப்படுகிறது.
சிறிலங்காவின் ஆட்சித்தரப்புக்கு ஆதரவாக தமது செல்வாக்கு செலுத்தல் ஜால்ரா அடிப்புகள் மூலம் இவர்கள் பிறாண்டல்களை செய்தாலும் இந்த ஆட்சி உருவாகி 16 மாதங்கள் கடந்தும் 20 வருடங்களுக்கு முன்னர் இன்றைய நாளில் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன் என்ற தமிழருக்கும் அதேபோல 16 வருடங்களுக்கு முன்னர் இதேநாளில் தென்னிலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட் பிரகீத் என்ற சிங்கள ஊடகருக்கும் நீதிவரவில்லை என்பது தான் உண்மை.
2024 செப்டெம்பர் மாதத்தில் அனுர குமார திசாநாயக்க சிறிலங்காவின் அரச தலைவராக வந்ததும் இவ்வாறான படுகொலைகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதி வரும் என்ற புதிய நம்பிக்கை வந்தாலும் இப்போது அவை அவநம்பிக்கையாகும் வகையில் நிலைமை மாறுகிறது.
இதற்குள் பிரகீத் காணாமலாக்கப்பட்ட வழக்கில் ஒரு முக்கிய சந்தேகநபரான இராணுவ அதிகாரியும் கேர்னலாக பதவி உயர்தப்பட்ட செய்திகள் வந்துள்ளன.
இதற்கிடையே இப்போது தான் தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை யென சொல்லியபடியே தனது மாமனார் ரக பலே அரசியலை ரணில் செய்யும் நிலையில் இலங்கையின் சமகால விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு…
