Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் புத்துருவாக்க கேந்திர நிலையத்துக்கு விஜயம்

February 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் புத்துருவாக்க கேந்திர நிலையத்துக்கு விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில அரசாங்கத்தின் கல்வித் திணைக்களத்துடன் இணைந்த  i-Hub கம்பெனிக்கும் இன்று வியாழக்கிழமை (8) சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.

மேற்படி நிறுவனம் மாணவர்களுக்கும் பயிலுனர் தொழில் முனைவோருக்கும் மதியுரைசேவைகளையும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகின்ற மற்றும் முதலீட்டாளர்கள் ஊடாக நிதியங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற புத்துருவாக்க கேந்திரநிலையமாகவே (Innovation Hub) இடையீடு செய்கின்றது. 

i-Hub நிறுவனம் மாணவர்கள், புத்திஜீவிகள், கைத்தொழில்கள் மற்றும் சந்தையை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தி அரச ஒழுங்குறுத்தலைக்கொண்ட வசதி வழங்குகின்ற முறைமையொன்றை அபிவிருத்தி செய்வதற்கான உபாயமார்க்க இடையீடுகளையும் செய்துவருகின்றது. 

மதியுரை, வலயமாக்கல், பாவனையாளர் உறவுகள், முதலீட்டு வாய்ப்புகள், உதவிப் பொறியமைப்புகள் மற்றும் ஆய்வுகூட உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதலுடன் தொடர்புடைய துரித நெகிழ்ச்சியான மற்றும்   ஒத்துழைப்புச் சேவைகளின் ஒருங்கிணைப்பாக அமைகின்ற i-Hub, தனது சேவை பெறுனர்களுக்கு அவசியமான அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் பூர்த்திசெய்துகொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.  

அதன் பின்னர் அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்களையும் விசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களை பார்வையிடுதலிலும் சூரிய வலுச்சக்திக் கருத்திட்டங்களையும் உற்பத்திக் கைத்தொழில்களையும்  அவதானித்தலிலும் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை (08) இரவு கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் (முன்னர் Trivandrum  என அழைக்கப்பட்டது) நோக்கிப் பயணிக்கவுள்ளது.

Previous Post

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு | எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

Next Post

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 30 மனுக்கள் தாக்கல் – சபாநாயகர்

Next Post
புதிய நாடாளுமன்ற அமர்வு மே 14ம் திகதி இடம்பெறும்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 30 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures