தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக – காதல் இளவரசனாக- நடித்திருக்கும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வான் வான்’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், எஸ். தமன், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹம்சா மற்றும் சி. சாய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். மனதை வருடும் காதல் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘கனவோட கனவோட கதை பேச வந்தேனே.. நினைவோட நினைவோட நிறம் மாறி நின்றேனே.. நிகழாதோ பல மாயம்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத , பின்னணி பாடகர் மோஹித் சௌகான் பாடியிருக்கிறார். பாடல் வரிகள் – இசை ஒருங்கிணைப்பு- மெட்டு- குரல்- என அனைத்து அம்சங்களும் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
