விமானம் விழுந்து நொருங்கி இருவர் பலி
அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் ஒரு குட்டி விமானம் காலேஜ்டேல் விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.
அந்த விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் எர்லாங்கர் மெடிக்கல் சென்டருக்கு எடுத்து செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக காலேஜ்டேல் விமான நிலைய போலீஸ் செய்தி தொடர்பாளர் டான்யா சட்லர் கூறும்போது, “படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது, வெளிநபர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை” என்றார்.
விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை என்ஜின் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய அடையாளம் உடனடியாக தெரியவரவில்லை.
–