விபத்தற்குள்ளாகி குவாரிக்குள் விழுந்த டிரக்

விபத்தற்குள்ளாகி குவாரிக்குள் விழுந்த டிரக்

கனடா-பிரான்வோர்ட் தெற்கில் ஹாகெர்ஸ்வில் பகுதியில் பயங்கரமான விபத்து இடம்பெற்றதால் ஒருவர் இறந்ததுடன் இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் யூன்மாதம் 3-ந்திகதி காலை 7.45 இடம்பெற்றது. ஒரு வாகனம் மற்றொன்றின் மேல் ஏறியதால் வாகனம் குவாரி ஒன்றிற்குள் மூழ்கியது.
இந்த மோதலில் சம்பந்தப்பட்ட எஸ்யுவி வாகனம் தலைகீழாக புரண்டு சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.டிரக் தண்ணீர் நிறைந்திருந்த குவாரிக்குள் மூழ்கி விட்டது.
தண்ணீருக்குள் விழுந்த டிரக் பல மணித்தியாலங்கள் நீருக்குள் இருந்தது.அதனை எவ்வாறு மேலே கொண்டு வருவதென அதிகாரிகள் ஆலோசித்தனர்.
பிற்பகல் 4-மணிக்கு பின்னர் கனரக கிரேனின் உதவியுடன் பொலிஸ் நீர் மூழ்கும் அணி தண்ணீரை வெளியே அகற்றினர்.26வயதுடைய மனிதர் 2014 கறுப்பு நிற GMC Denali  வாகனத்திற்குள் சாரதியின் ஆசனத்தில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
டிரக் 6முதல் 7மீற்றர்கள் ஆழத்தில் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.
எஸ்யுவியிலிருந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் சக்கரத்திற்கு பின்னால் இருக்கும் சாரதிகளிற்கு ஒரு அப்பட்டமான நினைவூட்டலாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்த மனிதன் நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 26வயதுடைய Mathieu Guimondஎன அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

sink4

sinksink1sink2sink3

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News