ரொறன்ரோவில் பொலிஸார் அதிரடி சோதனை
ரொறன்ரோவில் இடம்பெற்ற இரு கொலைச் சம்பவங்களை தொடர்ந்து துப்பாக்கிக் குழுக்கள் மற்றும் போதைமருந்து கும்பல்களை இலக்கு வைத்து நகர் முழுவதும் வியாழக்கிழமை பொலிஸார் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ரொறன்ரோ முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது, குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்ட் யோர்க் மற்றும் எட்டோபிக்கோ ஆகிய பகுதிகளில் பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிகள் மற்றும் போதைமருந்துகள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.