மகனை 50,000க்கு விற்ற தாய்: 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் தனது மகனை ரூபாய் 50,000க்கு விற்ற சம்பவம், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்னா மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணே குறித்த குற்றத்தை செய்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கூலி வேலை செய்து வந்த லட்சுமியின் கணவர் நாராயண் இறந்துள்ளார்.
இதன்பிறகு, தனது மகன் சிவத்தை வளர்ப்பது கடினம் என கருதிய லட்சுமி, உத்திர பிரதேசம் மிர்சாபூரை வசிப்பிடமாகக் கொண்ட ஜஹாங்கிர் அலி மற்றும் குட்டு அலியிடம் தனது மகன் சிவத்தை 50,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜஹாங்கிர் குடும்பத்தில் வாழ்ந்த வந்த சிவம், ஜூன் 10ம் திகதி வீட்டிலிருந்த தப்பி மிர்சாபூரில் உள்ள குழந்தைகள் நலக்குழு உறுப்பினரை சந்தித்துள்ளார்.
இதனையடுத்து, ஜூன்18ம் திகதி பொலிசார் சிவத்தின் தாயார் லட்சுமியை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், லட்சுமியை கைது செய்துள்ளதாகவும், மேலும், மிர்சாபூரை சேர்ந்த ஜஹாங்கிர் அலி மற்றும் குட்டு அலியை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.