பேஸ்போல் மட்டையால் வாலிபனை தாக்கிய 18-வயது ஆண் கைது.

பேஸ்போல் மட்டையால் வாலிபனை தாக்கிய 18-வயது ஆண் கைது.

கனடா-கடந்த மாதம் தனது நண்பன் வீட்டில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த 15-வயது வாலிபனான நோவா றபானியை கொடுமையாக தாக்கி குற்றத்திற்காக 18-வயது ஆண் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருட்டு மற்றும் கொடிய தாக்குதல் குற்றங்களிற்காக இவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை கைது செய்யப்பட்ட நபர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட உள்ளான். வியாழக்கிழமை நீதி மன்றத்தில் தோற்றமளிக்கு முன்னர் பெயர் விபரங்களை பொலிசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். இரண்டாவது சந்தேக நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
தாக்கப்பட்ட பின்னர் றபானி நொருங்கிய மண்டை மூளை தாடை மற்றம் முதுகில் பலத்த காயங்களுடன் வலது பக்கத்தை அசைக்க முடியாத நிலையில் தீவிர சிகிச்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பேச முடியாத நிலையில் வைத்தியசாலையில் றபானி அனுமதிக்கப் படடிருக்கும் இந்நிலையில் இச்சம்பவம் ஒரு வன்முறை வெறுப்பு குற்றமாக இருக்கலாம் என குடும்பத்தினர் ஆச்சரியமடைகின்றனர். றபானி ஒரு பாகிஸ்தான் முஸ்லீம் ஆவார்.
வைத்தியசாலையில் இருந்து றபானி விடுவிக்கப்பட்ட போதிலும் பழைய வழக்கமான நிலைக்கு திரும்ப நிண்ட காலம் பிடிக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்த குற்ற செயலில் மற்றும் 10சந்தேக நபர்கள் உள்ளதாகவும் இவர்களில் இருவர் 14 மற்றும் 15வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மீது வாகனம் ஒன்றை திருடிய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

teen1teen2teen

 

1,015 total views, 362 views today

– See more at: http://www.canadamirror.com/canada/75871.html#sthash.Z5dlWD6V.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News