பிறந்த நாள் வாழ்த்துக்கள் கனடா! நூற்றுக்கணக்கான கனடிய கொடிகளினால் வீட்டை அலங்கரித்த தம்பதிகள்.
இந்த சிறந்த நாட்டில் வாழ்வது குறித்து நாங்கள் பெருமையடைகின்றோம் என தெரிவித்தனர்.
இவர்கள் 20வருடங்களிற்கு மேலாக லேத்பிரிட்சில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு கனடா தினத்தன்றும் அதிக கனடிய கொடிகளை சேகரித்தனர்.கொடிகள், போக்கள் மற்றும் பின்கள் போன்றவற்றின் விலைகளை விட கனடா தினத்தை ஊக்குவித்தல் இந்த தம்பதிகளிற்கு இழப்பை விட மதிப்பானது.
கனடா தினத்திற்கு முன்னய நாள் பூராகவும் தங்கள் வீட்டை அலங்கரிக்க செலவிடுகின்றனர்.வீடு பூராகவும் கனடா கொடிகளினால் சூழப்பட்டிருக்கும். அடுத்த வருடம் கனடாவின் 150வது பிறந்த தினத்தை தனிச்சிறப்புடையதாக செய்ய உத்தேசித்துள்ளனர்.