பக்கவாதத்து சிறந்த நிவாரணம் தரும் சீட்டாட்டம்!
சீட்டாட்டம், நுரைப் பந்து அல்லது மடிக்கப்பட்ட கடதாசியினை கழிவு கூடைக்குள் போடுவது போன்ற செயற்பாடுகள் ஒருவரின் உடல் வலிமையை மீட்க உதவும் என புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
இது தொடர்பான தகவல்கள் Lancet Neurology எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் ஆய்வுகள் நான்கு நாடுகளை சேர்ந்த 14 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தேர்வுசெய்யப்பட்ட நோயாளர்கள் எழுந்தமாறாக இரு வேறு குழுக்களாக ஆராயப்பட்டிருந்தனர்.
இதில் குறித்த ஒரு குழுவினர் வீடியோகேம் ஆட பணிக்கப்பட்டிருந்தனர், மற்றைய குழுவினர் சீட்டாட்டம் போன்ற பொழுது பொக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இப் பயிற்சிகள் ஒரு மணி நேரத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களில் இரு வாரத்தில் 30 வீத முன்னேற்றமும், நான்கு வாரத்தில் 40 வீத முன்னேற்றமும் அவதானிக்கப்பட்டது.
இரு குழுக்களுக்கிடையிலும் பெரிதளவில் வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.