திடீர் தீயினால் வீடு முழுமையாக சேதம்
ரொறன்ரோவின் ஈட்டோபிக்கோ பகுதியில் உள்ள வீடொன்றில் திடீர் என்று தீ ஏற்பட்டமையினால் அது தீக்கிரையாகிய முழுமையாக சேதமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் சுமார் 250,000 டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹோனர் அவனியூவிற்கு தெற்கே உள்ள 30 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள குறித்த வீட்டில் நேற்று அதிகாலை தீடீரென்று தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் அது குறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் வழங்கப்படவே, அவர்கள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.
எனினும் அவர்கள் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது, அந்த பகுதி முழுவதும் கரும் புகையினால் சூழப்பட்டிருந்துள்ளது. தீ பற்ற ஆரம்பித்தவுடன், அந்த வீட்டில் இருந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவாறு தப்பி வெளியே வந்துள்ளனர்.
இது குறித்து வீட்டில் இருந்தவர் கருத்து தெரிவிக்கையில், ‘முதலில் வீட்டின் படுக்கை அறையில் தீ பற்றிக்கொண்டது. பின்னர் அது வீட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரைவாக பரவிக்கொண்டது’ என்றார்.
அதேவேளை தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சியின் பலனாக சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
249 total views, 249 views today
– See more at: http://www.canadamirror.com/canada/65331.html#sthash.P0eqMjJO.dpuf