தமிழ் சினிமா கலைஞர்களின் வாழ்த்துக்களை பெற்ற ரொறோன்ரோ கலைஞர்கள்
கனடா நாட்டில் பல இசை நிகழ்வுகளை மேடையேற்றி வரும் “மின்னல்” இசைக்குழுவின் உரிமையாளர் செந்தில்குமாரன் அவர்கள் தனது இசை கலைஞர்களுடன் இணைந்து புதிய இசை அமைப்புகள், தமிழ் சினிமா பாடல்களுக்கான “Cover Version” போன்ற தனது இசை படைப்புகளை செய்வதற்கென சொந்தமாகவே சிறந்த ஒலிப்பதிவுகூடம் அமைத்து இசை சேவை செய்து வருகின்றார்.
அண்மையில் இவரது இசை குழுவினருடன் இணைந்து மாதவன் நடிப்பில் வெளிவந்த “இறுதி சுற்று” படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய “வா மச்சானே மச்சானே” பாடலுக்கு செய்த “Cover Version” மின்னல் ம்யூசிக் என்ற யூடியூப் இணைய தளத்தில் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றிருந்தது.
இவற்றுக்கு மேலாக கடந்த வாரம் நடிகர் மாதவன் இந்த பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சில் இருந்த மின்னல் இசை குழுவினருக்கு போனஸாக சந்தோஷ் நாராயணன் அவர்களும் இவர்களை பாராட்டி தனது Facebook இணைய தளத்தில் ஷேர் செய்துள்ளார்.
இது போன்ற முயற்சிகள் மென்மேலும் வெற்றிபெற லங்காசிறி மின்னல் இசை குழுவினரையும், செந்தில்குமாரன் அவர்களையும் வாழ்த்துகின்றது. உங்களது படைப்புகளுக்கும் லங்காசிறி ஊடக அனுசரணை பெற [email protected] எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும்.
“Vaa Machaney” Cover by Shagana, Vaishali & Kavya – Irudhi Suttru… Wow .. Awesomeeeeee folks https://www.youtube.com/watch?v=s6MGVMsE9gY&feature=share …