சுற்றுலா சென்ற குடும்பஸ்தர் தாய்வானில் உயிரிழப்பு

சுற்றுலா சென்ற குடும்பஸ்தர் தாய்வானில் உயிரிழப்பு

தான் கடமையாற்றுகின்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக தாய்லாந்திற்கு சுற்றுலாச் சென்ற மன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முன்னணி நிறுவனத்தின் வருடாந்த சுற்றுலாவில் சென்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றின் வியாபார முகாமையாளராக கடமையாற்றிய ஏ.நிர்மலராஜன்(யூலி) (வயது-37) என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் தான் கடமையாற்றுகின்ற குறித்த நிறுவனத்தின் வருடாந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தாய்லாந்திற்குச் சென்ற நிலையிலே அங்கு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இரவது சடலத்தினை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு குறித்த நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும்; தெரியவருகின்றது.

மன்னாரை பிறப்பிடமாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் தற்போது திருகோணமலையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News