சுமார் 7500 தொழில் குறைப்புக்களை ஏற்படுத்தவுள்ளது பொம்பாடியர் நிறுவனம்
கனடாவின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான பொம்பாடியரில், சுமார் 7500 தொழில் குறைப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில் குறைப்புக்கள், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என, அண்மை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த நிறுவனத்தின் கனடாவில் உள்ள கிளையில் 2000 தொழில் குறைப்புக்களும், கியூபெக்கில் உள்ள கிளையில் சுமார் 1500 தொழில் குறைப்புக்களும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொடர்பான பணியாளர்களிலும் மூன்றில் இரண்டு பகுதியினர் வேலையை இழக்க நேரிடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயம், வான் வழி துறை வார்ந்த பணியளார்களில் சுமார் 2500 பேரும் குறித்த நிலைக்கு முகம் கொடுக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது