கொரிலாவிடம் சிக்கிய சிறுவனின் விபரம் வெளியானது திகில் பதிவுகள்…

கொரிலாவிடம் சிக்கிய சிறுவனின் விபரம் வெளியானது திகில்  பதிவுகள்…

gorela-600x264 gorela02-600x600gorela01-600x446

கொரிலா ஒன்றிடம் சிக்குண்டு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்தப் பூங்காவில் கொரிலா இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள் 3 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.

இதன்போது, அங்கிருந்த 17 வயதுடைய ‘ஹரம்பே’ எனப்பெயரிடப்பட்ட ஆப்பரிக்க கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்றதோடு சுமார் 10 நிமிடங்கள் அங்கும் இங்குமான இழுத்துச் சென்றது.

இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தனது 17ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.

கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கொரிலாவிடம் சிக்கிய சிறுவன் இறந்திருக்கலாம் என பலராலும் நம்பப்பட்ட போதும் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் புகைப்படங்களும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் முதன் முதலாக சிறுவனின் புகைப்படம் சிறுவனின் விபரங்கள் பெற்றோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

3வயதுடைய இசாஹா டிக்சர்சன் என்ற சிறுவனே இவ்வாறு கொரிலாவிடம் சிக்குண்டவன் ஆவான்.

குறித்த சிறுவன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தாயாரான 32 வயதுடைய மிச்சல் கிரிக்,

‘எனது மகனுக்காக கடவுளிடம் செபம் செய்த மற்றும் தனது அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். எனது மகனை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கடவுள் காப்பாற்றியுள்ளார். எனது மகனுக்கு பலத்த காயங்களோ, எலும்பு முறிவுகளோ ஏற்படவில்லை. சிறு காயம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. அவன் நன்றாக நடக்கின்றான். இந்த சம்பவம் சகல பெற்றோர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் எனது மகனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கின்றேன். என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஓஹியோ பொலீசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.

குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஓஹியோ பொலிசார் தமது அறிக்கையில்,

‘பெற்றோரின் கவனயீனம் காரணமாக தான் குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.

குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம்.

கொரில்லாவை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இணைய மனுவில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இச்சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோரே பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News