குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய ஆயிரக்கணக்கானவர்கள் கனடிய எல்லைகளில் கைது.

குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய ஆயிரக்கணக்கானவர்கள் கனடிய எல்லைகளில் கைது.

பயணிகள் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்க படுவதற்கு முன்னர் திரையிடல் சோதனைக்கு ஆளாக்கபடுகின்றனர். சிபிசி செய்தியின் புலன்விசாரனை ஒன்றினை தொடர்ந்தே இச்சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நவம்பர் 21, 2015ல் இத்திரையிடல் முறை நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து கனடா எல்லை சேவைகள் ஏஜன்சி நிலுவையில் உள்ள கரிமினல் குற்ற கைது ஆணைப்பத்திரங்கள் கொண்ட 3,067-பேர்களை எல்லை கடப்புகளில் வைத்து கைது செய்துள்ளது.
மாற்றம் நடைமுறைக்கு வர முன்னர் CBSA கனடா எல்லை சேவைகள் ஏஜன்சி தப்பியோடிய குற்றவாளிகளில் வெறும் 556பேர்களை மட்டுமே பிடித்துள்ளது. கிட்டத்தட்ட ஆறு மடங்குகள் அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோ தென்மேற்கு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து நியாயம் கேட்டு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து- நைஜிரிய மனிதன் ஒருவனால் துன்புறுத்தப்பட்டவர்-இவர் ஒரு கத்தோலிக்க மதகுரு.
2004ல் நைஜீரிய பாதிரியார் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.பொலிசார் இவரை கைது செய்ய முன்னர் நைஜீரியா திரும்பிவிட்டார். நைஜீரியா திரும்பிய இவர் மீண்டும் 9வருடங்களின் பின்னர் கனடா திரும்பினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு இவர் மீண்டும் கனடா வர முடிந்ததென கேள்விகளை எழுப்பினார்.
இவர் மீது கனடா பூராகிலுமான பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2013ல் தேவாலய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள கனடா வந்துள்ளார். கனடா வந்துள்ளதை பொலிசாரும் அறிந்து கொண்டனர். ஆனால் இரண்டாவது தடவையும் பொலிசாரின் பார்வையில் இருந்து நழுவி விட்டார்.
பெண்ணின் கோரிக்கையை செவிமடுத்த சிபிசி செய்தி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பே இந்த எல்லை {CBSA}  ஏஜன்சி சேவைகளின் பலப்படுத்தல்.
நாட்டிற்குள் நுழைய முயலும் பயணிகளை திரையிடல் செய்ய உதவும் பொருட்டு யு.எஸ். எல்லை அதிகாரிகள் கடந்த 15-வருட கால கனடிய தகவல்களை உபயோகிக்கின்றனர்.
ஒவ்வொரு பயணிகளையும் தரவுத்தளத்தினூடாக திரையிடுதல் கனடாவின் எல்லை கடத்தலை தடை செய்யலாம் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

– S

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News