குடிவரவு ஆலோசகரின் ஊழல். நூற்று கணக்கானோரின் குடியுரிமை வதிவிட அந்தஸ்து அந்தரத்தில்.

குடிவரவு ஆலோசகரின் ஊழல். நூற்று கணக்கானோரின் குடியுரிமை வதிவிட அந்தஸ்து அந்தரத்தில்.

கனடா-கடந்த இலையுதிர் காலத்தில் குடிவரவு ஆலோசகர் Xun “Sunny” Wang ஒரு பெரிய குடிவரவு மோசடி திட்டம் காரணமாக குற்றம்சாட்டப்பட்டார். இத்திட்டத்தினால் 1,600 வாடிக்கையாளர்களின் நிலை குறித்து இவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்பதை குடிவரவு மற்றும் எல்லை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்தின் வரலாற்றிலேயே இடம்பெற்றுள்ள பாரிய தனி ஒற்றை குடிவரவு மோசடி புலன் விசாரனை இதுவென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தவாரம் கனடா எல்லை சேவைகள் அதிகாரிகள் கிட்டத்தட்ட 320 வழக்குகள் தவறாக பிரதி நிதித்துவ படுத்தப் பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதனால் இவர்களது குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிடமை ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 500வழக்குகள் இன்னமும் விசாரனையில் உள்ளது. மேலதிகமான தனிப்பட்டவர்கள் 136 பேர்கள் தாங்களாகவே தங்களது நிரந்தர வதிவுடமை தகைமைகளை திரும்ப கொடுத்து விட்டனர்.
எனினும் Wangன் வாடிக்கையாளர்கள் சிலர் சண்டைக்கு ஆயத்தமாகின்றனர். குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் இதுவரை 43 நிரந்தர வதிவுடையாளர்களிற்கு எதிராக விலக்கல் கட்டளைகளை வழங்கியுள்ளனர். இவர்களை ஐந்து வருடங்களிற்கு கனடாவில் இருந்து தடைசெய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகமானோர் மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில்- Wang மோசடி குறித்து தங்களிற்கு எதுவித அறிவும் கிடையாதென மேன்முமேறையீடு செய்துள்ளனர்.தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கின்றனர்.
குடிவரவு அகதிகள் மற்றும் கனடிய குடியுரிமை அதிகாரிகளால் வாங்கின் எந்த ஒரு வாடிக்கையாளர்களினதும் குடியுரிமையை தாங்கள் மீள பெற்றுக்கொண்டதாக சொல்ல முடியவில்லை. ஏனெனில் இவர்கள் பெரிய அளவிலான வழக்குகளின் புலன்விசாரனை சம்பந்தப்பட்ட விளைவுகளை கண்காணிக்க மாட்டார்கள்.
New Can Consultants ன் Wang and his associates கடந்த வருடம் வாடிக்கையாளர்களின் கடவு சீட்டுக்களை திருத்தியமைத்து-குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடமை பெறுவதற்கு கனடாவில் வசித்திருக்க வேண்டிய கால எண்ணிக்கையை மாற்றியமைத்தமை தெரியவந்துள்ளது. உண்மையில் அவர்கள் அந்த கால பகுதியில் அவ்வாறு வசிக்கவில்லை.
இதே போன்று பல மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறைந்தது 10மில்லியன் டொலர்கள் வரை இத்தகைய மோசடிகள் மூலம் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு அக்டோபர் 2015-ல் ஏழு வருட சிறைத்தண்டனையும் 900,000மேற்ப்பட்ட அபராதமும் விதிக்கப்பட்டது.இத்தகைய குற்றத்திற்கு கிடைத்த மிக கடுமையான தண்டனை இதுவாகும்.

wang2pass1

pass2
பிரிட்டிஷ் கொலம்பியா, றிச்மன்ட்டில் வாங் தன் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News