காரில் சிக்கிய 6 வயது குழந்தை: நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த அதிசயம்!
ரஷ்யாவில் 6 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கார் விபத்தில் இருந்து தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் Cheboksary என்ற மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் பனி அதிகம் மிகுந்த பகுதியில் விளையாடிக் கொண்டு வந்தனர். அப்போது பனியில் சறுக்கிக் கொண்டு வந்த 6 வயது மதிக்கதக்க குழந்தை ஒன்று எதிர்பாரதவிதாமாக திசை மாறி வாகனங்கள் செல்லும் சாலையில் இறங்கிவிட்டது.
அப்போது அச்சாலை வழியே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக காரின் முன்சக்கரம் சிறுமியின் கால் மீது ஏறி இறங்கியது. இதில் அக்குழந்தை வலி தாங்க முடியாமல் அழத்தொடங்கியது. இதைக் கண்ட அருகில் இருந்த ஒருவர் அச்சிறுமியை உடனடியாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது கால்கள் எதுவும் உடையவில்லை என்றும் சிறிதளவு காயம் தான் என்றும் விரைவில் இது குணமாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தை கொஞ்சம் திசை மாறி இருந்தாலும் குழந்தையில் தலையை கார் ஏற்றியிருக்கும் என்றும் குழந்தை பிழைத்தது அதிசயம் தான் என்றும் இச்சம்பவத்தை அங்கு கண்டவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குழந்தை கார் விபத்தில் இருந்து தப்பிய போது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.