கருவின் தொடக்க நாட்கள்… புதிய அறிதல்கள்

கருவின் தொடக்க நாட்கள்… புதிய அறிதல்கள்

கருவின் ஆரம்ப நிலை, ஓரிரு வாரங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. ஆண் உயிரணுவும் பெண் உயிரணுவும் சேர்ந்து உருவான உயிர்க்கருவின் ஆரம்பகட்டத்தில், இரண்டு வாரங்களுக்குள், செல்கள் அடங்கிய ஓர் உருண்டைதான் உருவாகும். இதை ஆராய்வது மிக முக்கியம்.

14 நாட்களுக்குள் கருப்பையின் வெளியில் உருவாகியிருக்கும் உயிரணுக்களின் ஐக்கியம், இரண்டாவது வாரத்தில்தான் அம்மாவின் கருப்பைக்குள் இடப்படும்.

நாற்று நடுவதைப் போல இது நிகழ்ந்த சில தினங்களில்தான் கருவுக்கு உரு கிடைக்கிறது. தனித்துவம் பிறக்கிறது.

ஏழு நாட்களுக்கு அப்புறம் ஏற்படும் இந்த அடுக்கடுக்கான மாற்றங்களை ஆராய்வது இதுவரை பெரும் சவாலாய் இருந்துவந்தது. சமீபத்திய புத்தம்புது மருத்துவ அணுகுமுறை, கருவின் மிக இளைய ஆரம்பநிலை முழுவதையும் பிரித்து அறிவதைச் சாத்தியமாக்கி உள்ளது.

கரு ஆக்கத்தில் இதுவரை தெரியாத புதிர்கள்

கருப்பைக்கு வெளியே முதலில் கரு ஆக்கம் நடந்து, பிறகு கருப்பைக்குள் அது இறங்கி உருப்பெறும் முதல் இரண்டு வாரகால வளர்ச்சி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஓர் எலியின் சிசு வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

இதில் ஒரு தீர்வு எழுதப்பட்டது: ‘எலியின் சிசு வளர்ச்சி தான் பொதுவான ஒரு பரிணாம வளர்ச்சி. எந்த ஒரு சிசுவின் வளர்ச்சி விருத்தியும் இப்படிப்பட்டதுதான். எலி என்றல்ல, மனித வளர்ச்சியும் இப்படித்தான்.’

இதன் அர்த்தம், ஆண் எலி மற்றும் பெண் எலி ஆகிய இரண்டின் உயிரணு ஐக்கியம் கருப்பைக்கு வெளியே நடந்து, அது எலியின் கருப்பைக்குள் நடவாகி செல்கள் பிறக்க, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் ஆகியிருக்கும். மனிதனுக்குத்தான் பத்து மாத பந்தம். எலிக்கு இல்லை. இந்நிலையில், ‘எலியின் சிசு வளர்ச்சிதான் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்குமான பொதுவான ஒரு பரிணாம வளர்ச்சி’ என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் தொடர்ந்து ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. பிரசவ காலம் ஜீவனுக்கு ஜீவன் மாறுபடும்போது, எலியின் ஆரம்பக் கரு வளர்ச்சி மீதான காலக்கெடுவையே அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவாக்கிய முந்திய ஆய்வு, ஒரு நிரடலாகத்தான் இருந்தது.

கடந்த மார்ச்சில் ஒரு முக்கிய ஆய்வாக வெளியாகியுள்ள ராக்பெல்லர் பல்கலைக் கழக ஆய்வறிக்கை, மனித சிசு வளர்ச்சியின் துவக்கக் கட்டங்களின் கால அவகாசம் எலியை ஒத்தது கிடையாது என்று ஆணித்தரமாய் விளக்கிவிட்டது.

உயிரினத்துக்கு உயிரினம் இந்த ஆரம்ப காலம் மாறுபடும் என்றும், கருப்பைக்கு வெளியே ஏற்படும் ஐக்கியமும், பிறகு சிசு கருப்பைக்குள் இடப்படும் விதமும் வெவ்வேறு உயினங்களுக்கு வெவ்வேறு விதமாய் இருக்கும் என்றும் இந்த ஆய்வு தனது இறுதித் தீர்ப்பை முன்வைத்துள்ளது.

எல்லா உயிரினங்களுக்கும் ஒரே கால அளவு கொண்ட கருத்தரித்தல்தான் என்ற அறிதலை, இந்த புத்தம்புது ஆய்வறிக்கை மாற்றி எழுதியுள்ளது.

14 நாள் கட்டளை

மனித சிசு, தலை முதல் கால் வரை கொண்ட ஒரே நூலிழையாய் முதல் வடிவம் காண்பது, பதினான்காவது நாளில். ஆகவே, 14-வது நாள் முக்கியமானதாகும்.

இதற்கு முன்னால், உருவான சிசு இரண்டாகப் பிரிந்துவிடலாம். மூன்றாகிவிடலாம். பல பாகங்களாகக் கூட சிதறிவிடலாம். இதை மருத்துவம், ‘பதினான்காவது நாள் கட்டளை’ என்கிறது.

சிசுவின் ஆரம்பகால ஆக்கம், 14 நாட்களுக்குள் முடிவடைந்துவிடுகிறது. இக்காலகட்ட ஆய்வு சவாலானது. இதற்கப்புறம் அது கரு கிடையாது. மனிதன்
கருப்பைக்குள் உருவாகிவிடுகிறான்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ள கட்டளை இது. உயிரியல் ரீதியாக அம்மாவின் கருவுக்குள் மனித ஜீவன் இறுதி வடிவம் கொள்வது 14-வது நாளில்தான்.

இதுவரை இந்த இக்கட்டான காலகட்டத்தை விளக்கிய சிறப்பான ஆய்வறிக்கைகள் கிடையாது. இந்த வெற்றிடத்தை ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரப்பிவிட்டார்கள்.

தேவைப்படும் சட்ட மாற்றங்கள்

உருவான கரு இரண்டு வாரங்களுக்குள் கலைவது உண்டு. இதற்கான காரணங்கள் கோட்பாட்டு ரீதியாகத்தான் அறியப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

ஆகவே, பதினான்கு நாட்கள் கட்டளையைக் கைவிட வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கரு பாதுகாப்பு விஷயத்தில் நேர்ந்துள்ள எதிர்பாராத திருப்பம் இது.

எந்த ஒரு நாடுமே ஆரம்பகட்ட சிசு மீது ஆய்வு செய்ய அனுமதி தரவில்லை. இதற்கு அனுமதி தேவை என்பதை, இப்புது ஆய்வின் வெற்றி முன்வைக்கிறது. நாடுகளும் சிந்திக்கின்றன.
கருப்பையுடன் இணைந்து முதன்முதலாக உருவாகும், மூன்றடுக்கு செல் உயிரி

14 நாட்களுக்குள் சிசுவின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பகட்ட கருச்சிதைவை எவ்விதத்தில் தவிர்க்க முடியும் என்ற கேள்விக்குப் பிரகாசமான பதில் கிடைத்துவிடும். இன்று வரை இதற்குப் பதில் இல்லை.

இரண்டாவது, முக்கியத்துவம் உள்ளது. ஆரம்ப நாள் முதல் கருவின் ஆக்கம் பற்றிய தெளிந்த ஞானம் கிடைக்கும். இப்போது மருத்துவ அறிவியல் ரீதியாக டெஸ்ட் டியூப் பேபி வரை சிறப்பான அறிதல்கள் இருந்தபோதிலும், இயற்கை கருவுறுதலின் முதல் பதினான்கு நாட்கள் வளர்ச்சி குறித்த முழு அறிவு கிட்ட, 14 நாட்கள் கட்டளையை கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.

ராக்பெல்லர் மருத்துவக் கழக மருத்துவ அதிசயம், இளங்கருவின் ஆரம்ப நாட்களுக்குள் முதல் பார்வையை நிகழ்த்தி இருந்தாலும், மேற்சொன்ன தீர்க்கப்படாத இரண்டு முக்கிய விஷயங்களையும் தீர்க்க முடியும் என்ற வழியையும் காட்டியிருக்கிறது. அது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

வரைமுறைகள்

மருத்துவ ரீதியாக புதியதோர் இரு பரிமாண (2D) வழிமுறையை வரையறுத்துத் தந்துள்ளார்கள் ஆய்வாளர்கள். ஆனால் இதிலும் வரைமுறைகள் உண்டு என்கிறார்கள்.

இரு பரிமாண ஆய்வுகள் மேலோட்டமானவை. ஆழ்ந்து ஆய்வு செய்து முடிவுகளைத் தர முடியாதவை. ஆகவே இரு பரிமாண ஆய்வுகளால் தோராயமான முடிவுகள்தான் கிடைக்கும்.

எனவேதான் முப்பரிமாண வழிமுறை தேவைப்படுகிறது. கருவின் ஆக்கம் பற்றி கதவு திறந்துவிட்டுள்ள இப்புது வழிமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் முப்பரிமாணத்தில் மேற்கொண்டால் கிடைக்கக்கூடிய தகவல்களும் தீர்வுகளும், சிசு வளர்ச்சியின் ஆரம்பநிலைகள் பற்றி நாம் அறியாத பற்பல தகவல்களை அள்ளித் தரும்.

தவிர, இந்த வழிமுறைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆய்வு மாதிரிகள், மிகச் சாதாரணமானவை என்பதும், இத்துறையில் புதிய நுழைவாயில்களைத் திறந்துவிடுகிறது. மேம்படுத்தப்பட்ட ஆய்வு மாதிரிகள் கொண்டு ஆய்வு நடத்தப்படும்போது, இன்னும் நம்பத் தகுந்த முடிவுகள் வெளிப்படும்.

சிசுவின் கருவுக்குள் நடந்துள்ள முதல் நுழைவு இது. இதை முன்வைத்து, நாம் அறியாத இப்பகுதி தகவல்கள் பலவற்றை, அசத்தும் மருத்துவ அறிவியல் உலகம் கொண்டுவந்து கொட்டத்தான் போகிறது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News