கனேடிய தபால் சேவையில் ஏற்படக்கூடிய தடங்கல்! சமூக மேம்பாட்டு அமைச்சர் Jean-Yves Duclos அவர்கள் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

கனேடிய தபால் சேவையில் ஏற்படக்கூடிய தடங்கல்! சமூக மேம்பாட்டு அமைச்சர் Jean-Yves Duclos அவர்கள் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

கனேடிய தபால் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படடாலும், கனேடியர்கள் தமக்கான சேவைகளையும், உதவி நிதி கொடுப்பனவுகளையும் (benefits) தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள கனேடிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கனடிய தபால் திணைக்களத்தின் சேவைத் தடங்கல்களின்போது, உதவி நிதி மற்றும் கொடுப்பனவுகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய தகவல்களை Canada.ca என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம் எனவும்

அதேவேளை, சகலரையும், தமது கொடுப்பனவுகளையும் உதவி நிதிகளையும் தடையின்றிப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, தமது வங்கிக் கணக்குகளில் நேரடி வைப்பீட்டு (direct deposit) வசதிகளை உருவாக்கிக் கொள்ளும்படி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

கனடா ஓய்வூதியக் கொடுப்பனவு (Canada Pension Plan) மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு (Old Age Security) ஆகியவற்றிற்கான காசோலைகளைத் தபால் மூலம் பெறுபவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள். இவர்களது காசோலைகள் ஜூலை 20 அன்று விநியோகிக்கப்படுவதற்காக கனடா தபால் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு, விசேட நடைமுறை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளது என்றும்,

தபால் சேவைத் தடங்கல்களின் போது, வேலைக் காப்புறுதி (Employment Insurance), கடவுச்சீட்டு, சிறுவர் நிதி உதவி (Child Benefit) , கனடா மாணவர் கடன் (Canada Student Loans) போன்றவை எவ்வாறு பாதிக்கப்படும் என்பது தொடபான மேலதிக விபரங்களை 1-800-622-6232 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

– See more at: http://www.canadamirror.com/canada/65389.html#sthash.OvL93hey.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News