கனடா- ஸ்காபுரோவில் குழந்தை பிரசவிக்க வைத்த தீயணைப்பு படை வீரர்கள்!

கனடா- ஸ்காபுரோவில் குழந்தை பிரசவிக்க வைத்த தீயணைப்பு படை வீரர்கள்!

கனடா- ஸ்காபுரோவில் கர்ப்பினிப் பெண் ஒருவருக்கு பருவத்திற்கு முந்திய பிரசவ வலி எடுத்துள்ளது.இதன் காரணமாக ஸ்காபுரோவில் தொடர்மாடிக் கட்டிடமொன்றில் வசித்த பெண் அப்பகுதி தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் வீட்டிலேயே தனது குழந்தையை பிரசவித்தார்.

சனிக்கிழமை இச்சம்பவம் நடந்தது.றாபியா வறூக் மற்றும் இவரது கணவர் சஹிட் றஹ்மான் இருவரும் சிரிவி ரொறொன்ரோ செய்தியாளரிடம் றாபியா காலை 7மணிக்கு படுக்கையில் இருந்த எழுந்திருந்த போது ஏற்கனவே இவருக்கு பிரசவ வலி எடுத்து விட்டதாக தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய ஆயத்தங்களை றஹ்மான் செய்து கொண்டிருக்கையில் இவருக்கு அசைய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

911-ஐ அழைக்க இரு தீயணைப்பு வீரர்கள்–Slobadon Kucevic  மற்றும் டானியல் அன்றூஸ் இருவரும் 7.45மணியளவில் வந்தடைந்தனர். றாபியா பிரசவிக்க தயார் நிலையை அடைந்ததை அறிந்து இவர்கள் பிரசவிக்க ஆயத்தமானார்கள்.அம்புலன்ஸ் வருவதற்கு முன்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழந்தை பிறந்து விட்டது.

அம்புலன்ஸ் தேவையான உபகரணங்களை கொடுக்க றஹ்மான் தொப்புள் கொடியை வெட்டினார்.
பிரசவத்தின் பின்னர் வறூக் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஞாயிற்றுக்கிழமை இரு தீயணைப்பு படை அதிகாரிகளும் அவரகளின் வீட்டிற்கு விஜயம் செய்தனர்.தீயணைப்பு அதிகாரிகள் இருவரும் தனக்கு பெரிய உதவி செய்தனர் என கூறி அவர்களிற்கு நன்றி தெரிவித்தார்.குழந்தைக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.

dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News