கனடா மார்க்கம் நகரின் இரட்டை நகரமாகும் வன்னி மாவட்டம்!

கனடா மார்க்கம் நகரின் இரட்டை நகரமாகும் வன்னி மாவட்டம்!

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் மார்க்கம் நகரத்தை வன்னி மாவட்டத்தின் இரட்டை நகரமாக்கும் முயற்சியில் மார்க்கம் கவுன்சிலர் திரு.லோகன் கணபதி ஈடுபட்டுள்ளார்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் மாகாண சபையின் அனுசரணையைப் பெற்று மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை ஆகிய நகரங்களோடு, கனடாவில் தமிழர்கள் பரந்து வாழும் ஏனைய நகரங்களான,

பிரம்டன், மிசசாகா, ரொறன்ரோ, ஏஜக்ஸ் போன்றவற்றை இரட்டை நகரங்களாக்குவது மிகவும் சாத்தியமான விடயம் எனவும், ரொறன்ரோ நகரினை வட-கிழக்கின் முக்கிய நகரத்துடன் இரட்டை நகரமாக்குவது சாத்தியம் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக இது தொடர்பாக தான் வடக்கு மாகாண முதல்வரின் அலுவலகத்துடன் இணைந்து கடந்த ஒரு வருடமாகப் பணியாற்றி வருவதாகவும்,

கனடாவின் தொழில்நுட்ப வளர்ச்சி நகரமாகவும், பல இலத்திரணியில், கணணியியல் நிறுவணங்களின் தலைமையிடமாகவும் மார்க்கமே திகழ்கின்றது. இது தவிர பல துறைசார் நிறுவனங்கள் இருந்தாலும்,

ஐ.பி.எம், அப்பிள், மைக்றோசொப்ற், லினோவா, போன்ற முதன்மை கணணி நிறுவனங்களின் தலைமையகங்களைக் கொண்டுள்ள மார்க்கம் நகரத்தை வன்னியின் இரட்டை நகரமாக்குவதன் மூலம்,

வன்னியின் தொழில்வாய்ப்புக்களை எதிர்காலத்தில் பெருக்குவதோடு, முதலீட்டு முயற்சிகளிலும் ஈடுபட வழி வகுக்கலாம் என்பது உறுதியான விடயம் என திரு. லோகன் கணபதி தெரிவித்தார்.

கடந்த 12 வருடங்களிற்கு மேலாக மார்க்கம் 7ம் வட்டாரத்தின் கவுன்சிலராக உள்ள திரு. லோகன் கணபதி அவர்களே கனடாவில் முதன் முதலில் தமிழர் மரபுரிமை மாதத்தை 2011ல் தனது மாநகரசபை மூலம் அங்கீகரிக்க வழியேற்படுத்தியவர் என்பதோடு, மார்க்கம் நகரத்தின் ஒரு தெருவிற்கு வன்னி வீதி என்று பெயரும் சூட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தனது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு அமையவும் கண்சவேட்டிவ் கட்சித் தலைமையின் ஆசிர்வாதத்துடன் போட்டியிலிறங்குவதாகவும் அவரிற்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தான் 2018ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதை தமிழ்த் தலைவர்களோடு இணைந்து அறிவிக்கும் நிகழ்வை இந்த மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை மார்க்கம் நகரிலுள்ள பிரபல்ய ஹொட்டேல் ஒன்றில் நிகழ்தவுள்ளதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் இலண்டனில் இடம்பெற்ற வடக்கு மாகாண முதல்வர் கலந்து கொண்ட யாழ்ப்பாண நகரத்தை இரட்டை நகரமாக்கும் விழாவில் வடக்கு முதல்வரின் அழைப்பின் பேரில் திரு.லோகன் கணபதி அவர்கள் கலந்து கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

logan

logan1

LoganV

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News