ஆலய மண்டபம் நிறைந்த பக்தர்கள் புடைசூழ கொடியேற்ற வைபவ நிகழ்வு ஆகம விதிகளுக்கு அமைவாக நடந்தேறியது. ஆலய தர்மகர்த்தா, முதல்வர், சமூக தலைவர், சமூக சேவை திலகம், ஆன்மீகவாதி, ஆலய நிர்வாக வித்தகர் என எல்லோராலும் அழைக்கப்பபடும் பெரு மதிற்புக்குரிய செல்வகுமார் ராஜரட்ணம் அவர்களின் சிறப்பான் நிர்வாகத்திலும் நேரடி வழிகாட்டலிலும் இந்த ஆலயம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருவது சிறப்பானதாகும். ஆலயத்தின் பிரதம குருக்களாக சிவஸ்ரீ துரைசாமியார் மணிவண்ண சிவாச்சாரியார், சிவஸ்ரீ விஸ்வநாத ரெங்கநாத குருக்கள், சிவஸ்ரீ மணிவண்ண கௌதம சிவாச்சாரியார், சிவஸ்ரீ இரத்தின பிரபாகக் குருக்கள், மற்றும் பிரம்ம ஸ்ரீ திருஞானசம்பந்த ரூபன் சர்மா ஆகியோர் கந்துகொண்டு விழாவினை மிகவும் ஆகம விதிகளுக்கு அமைவாக செய்து முடித்தமை பாராட்டுதல்களுக்குரியதாகும். கனடாவில் மட்டுமன்றி முகப்புத்தகத்தினூடாக பிரசித்தி பெற்று விளங்கும் மீனாட்சி அம்மன், சிவனின் ஆலய கொடியேற்றம் மண்டபம் நிறைந்த அடியார்கள் புடைசூழ நேற்று (06-05-2016) சிறப்பாக நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த
சிவபெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் எழுந்தருளிய சிவபெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார். அங்கு இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. கோவிலின் நித்திய நாதஸ்வர தவில் வித்துவான்களாக நாத வினோதமணி என எல்லோராலும் அழைக்கப்படும் முருகதாஸ் குழுவினர் மிகவும் அசத்தலாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இன்று ஆரம்பமான ஆலயத்தின் கொடியேற்றத்தினை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவுடனும் எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 2016-05- 14 ஆம் திகதி ரதோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பது விழாவின் சிறப்பம்சமாகும். நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும். பிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற துவஜாரோஹணம் நடக்கிறது. இதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் முதல் நாளே ஆரம்பமாகி நிகழத் தொடங்கி விடுகின்றன. அந்த அந்த ஆலய சம்பிரதாயப் பிரகாரம் கணபதி ஹோமம் அல்லது விஷ்வக்சேன ஆராதனத்துடன் மூலதேவதா மற்றும் பிராம்மண அனுக்ஞை முதல் நாள் இடம்பெறும். தொடர்ந்து உற்சவமூர்த்தி மற்றும் அஸ்திரதேவரிடமும் அனுக்ஞை பெற்று பெருவிழாவை ஆரம்பிக்கும் முகமாகப் பிரார்த்தித்துக் கொள்வர். ஆகம விதிகளுக்கு அமைவாக இன்று நடைபெற்ற விழாவினை குறிப்பிடுவதில் தப்பொன்றும் இல்லை. கொடியேற்ற நாளன்று புண்ணியாகவாசனம் முதலியன நிகழ்ந்த பின் “துவஜாங்குரம்” இடப்படும். துவஜஸ்தம்பத்தின் (கொடிமரம்) அடியில் அஷ்டதளபத்மம் வரைந்த பிரம்மாவைப் பூசித்து இந்த அங்குரார்ப்பணத்தை ஆற்றுவர். எனினும் கொடியேறிய உடன் இது விசர்ஜனம் செய்யப்பெற வேண்டும். ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இரு அங்குரங்கள் இருக்கக்கூடாது என்கிறது ஆகமம். இவற்றினை அடுத்து கொடியேற்றும் துணியில் வரையப்பெற்றுள்ள படத்திற்கு இறை உருவேற்றும் முகமாக “படபிரதிஷ்டை” செய்யப்பெறும். இது போலவே தம்பப் பிரதிஷ்டையும் அஸ்திரப் பிரதிஷ்டையும் பலிபீடப் பிரதிஷ்டையும் தனித்தனியே விஷேட ஆகுதிகள் வழங்கி ஹோமம் செய்து ஸ்நபன கும்பபூஜை செய்து ஆற்றும் வழக்கம் இருக்கிறது. ஆலய தர்மகர்த்தா ராஜா அவர்கள் கொடிப்பட பிரதிஷ்டையின் பின் கொடிப்படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து உற்சவ மூர்த்தியையும் அலங்கரித்து துவஜஸ்தம்பத்தின் அருகே எழுந்தருளச் செய்து புண்ணியாக வாசனம் செய்வதற்கு வழிவகை செய்தார்கள். . ஸ்தம்பத்திற்கு நியாசபூர்வமாக ஆராதனை செய்த பின் சமஸ்த தேவதா ஆவாஹனம் என்பதனைச் செய்வர். இது அகில தேவர்களையும் கொடித்தம்பத்தில் அருள்முகமாக எழுந்தருள வேண்டுவதாகும். இவாறாக சகல ஆகம விதிகளுக்கு அமைவாக இன்றைய கொடியேற்ற விழா இனிதே நடந்தேறியது. விழாவினை சிறப்பிக்க சமூக தலைவர், ஆன்மீகவாதி, ஊடக வித்தகர், அரசியல்வாதி, குடிவரவு சிறப்பு தேர்ச்சியாளர், சமய சொற்பொழிவு வித்தகர் என பலராலும் அழைக்கப்படும் சாமி அப்பாத்துரை மற்றும் கீதவாணி வானொலி நிலையத்தின் அதிபர் நடா ராஜ்குமார் அவர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டு விழாவின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தார்கள். ஆலயத்தின் வளர்ச்சியின் நீங்களும் பங்குபற்றி இறையருலினை பெற்றுயுமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
Langes, FCPA, FCGA
Tamilbc.ca
easy24news.com
langes lingam