கனடாவில் அதிகரித்து வரும் ‘free TV’ Android box: வழக்கு தொடர்ந்த கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள்

கனடாவில் அதிகரித்து வரும் ‘free TV’ Android box: வழக்கு தொடர்ந்த கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள்

கனடா மக்களிடையே பிரபல்யமாக இருந்து வரும் ‘free TV’ Android box விற்பனையை தடை செய்ய வேண்டும் என கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Android இயங்குதளம் மூலம் செயல்படும் இந்த ‘free TV’ Android box, அப்பிள் தொலைக்காட்சி போன்று இருக்கும், ஆனால் இயங்குதளம் மட்டும் Android ஆகும்,

சிறப்பு மென்பொருள் இணைக்கப்பட்டுள்ள இந்த box யினை, வாடிக்கையாளர்கள் தங்களது தொலைக்காட்சியில் இணைத்துக்கொள்வதன் மூலம், அங்கீகரிக்கப்படாத திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளை கூட பார்க்கலாம்.

இந்த Free TV நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, “நீங்கள் Free TV வாங்கினால், கேபிள் தொலைக்காட்சி கட்டணங்களுக்கு goodbye சொல்லிவிடலாம் “என விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விளம்பரத்தின் தாக்கத்தால், கனடாவில் Free TV- யினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. ஆனால், Free TV- யின் வருகையால் கேபிள் நிறுவன உரிமையாளர்கள் மிகவும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சிறிய அளவிலான கேபிள் கடைக்காரர்கள் தங்கள் கடைகளை மூடியுள்ளனர், இந்நிலை தொடர்ந்து விடக்கூடாது என கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள், எங்களுக்கு எதிராக விளம்பரங்களை Free TV வெளியிட்டு வருவதால், வியாபார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் மென்பொருள் மூலம் இயக்கப்படும் அந்த தொலைக்காட்சியில், அதைத்தவிர வேறு எதுவும் சிறப்பாக இல்லை.

எனவே இதனை தடை செய்ய வேண்டும் என Vincent Wesley வழக்கு தொடர்ந்துள்ளார், இதுதொடர்பான வழக்கு விசாரணையில், தற்காலிக தடை உத்தரவு வேண்டுமானால் பிறப்பித்து, பாதிப்படைந்த சிறிய கேபிள் கடைகளுக்கு இழப்பீடு வழங்கலாம்.

ஆனால் இந்த Free TV – யினை தடை செய்ய இயலாது என கூறியுள்ளனர், தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொண்டு நடைபெற்று வருகிறது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News