எடுத்துக்காட்டாக அமைந்துள்ள கனேடிய அமைச்சரவை

எடுத்துக்காட்டாக அமைந்துள்ள கனேடிய அமைச்சரவை

நாட்டின் அமைச்சரவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு கனேடிய அமைச்சரவை ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றது. ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான கனேடிய அரசு ஒரு எடுத்துக் காட்டாகவே அமைந்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டமும் பெற்றதுடன் பிரெஞ்சு மொழி மற்றும் கணித ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

இவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஒரு மருத்துவர். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் முன்னாள் விண்வெளி வீரர். இராணுவத்துறை அமைச்சராக இருப்பவர் சீக்கிய மதத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்.

அதேவேளை இளைஞர் நலத்துறை அமைச்சர் 45 வயதுக்கு உட்பட்டவர்.

விவசாயத்துறை அமைச்சராக இருப்பவர் விவசாயத்தை தொழிலாக செய்து வந்தவர். பொது பாதுகாப்பு மற்றும் அவசரக்கால உதவித்துறை அமைச்சராக இருப்பவர் சாரணர் இயக்கத்தில் பணியாற்றியவர்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பொருளாதாரத்துறை வல்லுனராக பணியாற்றியவர் என்பதுடன் நிதித்துறை அமைச்சர் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார். நீதித்துறை அமைச்சர் அந்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் ஆவார்.

விளையாட்டுத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சராக உள்ளவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். மீன்வளம், பெருங்கடல் மற்றும் கடற்படை அமைச்சர் அந்நாட்டின் மிகவும் புராதனமான பழங்குடியினத்தை சேர்ந்தவர்.

அத்துடன் கனடாவின் குடியேற்ற பிரச்சனை குறித்து கடுமையாக விமர்சித்து வந்தவர் குடியுரிமைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்களாகவும், இவர்களில் பலர் அறிவியலாளர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News