இவரை தெரியுமா? ஒன்ராறியோ பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்கப்பட்ட பர்தா அணிந்த தாய்.
கனடா- லண்டன், ஒன்ராறியோவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் அன்னையர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து பொலிசார் புலன்விசாரனை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இத்தாக்குதல் ஒரு வெறுக்கத்தக்க குற்றம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் திங்கள்கிழமை லண்டன், ஒன்ராறியோ.வொன்டலான்ட் வீதி தெற்கில் அமைந்துள்ள சுப்பர்கிங் பல்பொருள் அங்காடியில் மாலை 5மணியளவில் நடந்துள்ளது.
நான்கு வயது ஆண்குழந்தையுடன் அங்காடியில் காணப்பட்ட பெண் ஒருவரை தாக்கிய மற்றொரு பெண்ணை அடையாளம் காட்டுமாறு பொலிசார் பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்.
குழந்தையை வைத்திருந்த பெண் பர்தா அணிந்திருந்தார்.சந்தேக நபர் பெண்ணின் பர்தாவை இழுக்க முயன்றதாக பொலிசார் தெரிவித்தனர்.பர்தாவை இழுக்க முயன்றதோடு பெண்ணின் தலை முடியையும் இழுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தெரியாத மொழியில் கதைத்துக்கொ ண்டிருக்கையில் சந்தேக நபர் அவருடன் சண்டை போட்டிருக்கின்றார்.
இச்சம்பவம் குறித்த படம் ஒன்றை மனிதர் ஒருவர் திங்கள்கிழமை ருவிட்டரில் பதிவுசெய்ததை தொடர்ந்து இது குறித்து விசாரனை தூண்டப்பட்டது.
படத்துடன் செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
“எனது ஓரகத்தியை அங்காடி ஒன்றில் வைத்து அவரது முகத்தில் துப்பியதுடன் குத்தியும் உள்ளனர். அச்சமயம் அவரது கையில் எனது மருமகனும் இருந்துள்ளான். இச்சம்பவம் பெரும்பாலும் ஒரு வெறுக்கத்தக்க… செயல்….மக்கள் எவ்வாறு இத்தகைய மோசமானவர்கள்..”என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது
இச்சம்பவம் உந்துதல் சம்பந்தமான அல்லது வெறுப்பு காரணமானதாக இருக்குமாயின் வெறுப்பு குற்றம் தொடரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் லண்டன் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.