இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை

இறுதி  யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் :  பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை

  இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது.  

அதாவது    இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பாகங்களை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில்  கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அசராங்கங்களும் நிராகரித்து வந்தன.

கடந்த  2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆணையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பாகங்களை  மீட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் தெரிவித்துள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News