இறந்தும் 45 பேர்களிற்கு உயிர் கொடுத்த 16வயது வாலிபன்.
கனடா-மனிரோபாவை சேர்ந்த வாலிபன் ஒருவன் வாகன விபத்து ஒன்றில் மோசமாக தாக்கப்பட்டு இறந்து விட்டான்.இத்துயர சம்பவம் மனிரோபாவில் இடம்பெற்றது.
16-வயதுடைய ரெயிலர் கலசென் கார் ஒன்றை கடந்து செல்கையில் கட்டுப்பாட்டை இழந்த விபத்து நடந்தது. அக்டோபர் 22ல் நடந்தது. தனது வாகனமோட்டும் அனுமதிப்பத்திரம் கிடைத்த இரண்டாம் நாள் விபத்து இடம்பெற்றது.
விபத்தினால் ரெய்லருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு குணமடையவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்னர் உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்புவதாக தாயிடம் தெரிவித்துள்ளான்.
எப்போதாவது எனக்கு ஏதாவது நடந்தால் நான் எனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்புவதாக தாயிடம் கூறியுள்ளான். அதனால் மகனது விருப்பத்தை நிறைவேற்ற மிகவும் கஷ்டமாக முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானதாக தாய் தெரிவித்தார். ரைலர் கடுமையாக காயப்பட்டதால் இதயம் நுரையீரல் என்பன தானம் செய்ய முன்னர் சரிபார்க்கப்பட வேண்டும். ரைலர் விபத்தின் பின்னர் நான்கு நாட்கள் வாழ்க்கை ஆதரவில் வைக்கப்பட்டிருந்தான். கடந்த செவ்வாய்கிழமை சத்திர சிகிச்சை நடந்தது.
இதயமும் நுரையீரலும் மோசமாக பழுதடைந்து விட்டதால் டாக்டர்கள் ரைலரின் கிட்னிகள், ஈரல், கணையம், கண்கள் தசை மற்றும் திசுக்கள் அறுவடை செய்யப்பட்டன.
தனது உறுப்புக்களால் 45 மக்களின் உயிர்களை காப்பாற்றினான். புதன்கிழமை காலை 6.45மணியளவில் இறந்து விட்டான்.
11வயது மகனிற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. ரைலரின் தானம் சிறுவனிற்கு உயிர் கொடுத்தது.
இதனால் சிறுவனின் தாயாரும் ரைலரின் தாயின் சினேகிதியும் சேர்ந்து ரைலரின் மரணசடங்கிற்கான செலவுத்தொகையை சேகரித்து வழங்க முன்வந்துள்ளனர்.
விபத்தின் போது ரைலர் ஆசனப்பட்டி அணிந்திருந்தான். மது காரணமாக அமையவில்லை. விபத்து குறித்து ஆர்சிஎம்பியினர் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.