ஆப்கானிஸ்தான் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு படைகளிற்கு கனடா 465 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
வார்சோ-போலந்த்-கனடா ஆப்கானிஸ்தானின் நேச நாடுகள் சில தங்கள் படைகளை அதிகரித்து வரும் எழுச்சிகளை சமாளிக்க உதவும் பொருட்டு அந்த நாட்டில் வைத்திருக்க திட்டமிட்டிருக்கும் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிற்கு அதிக பணம் வழங்க உறுதி அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் உதவி திட்டத்திற்கும் மற்றும் நாட்டின் பாதுகாப்பு படைகளிற்கும் வழங்கும் தொகையை புதுப்பித்துள்ளது. வருடமொன்றிற்கு 150 மில்லியன் டொலர்கள் மேலதிகமாக வழங்கப்பட உள்ளது. மூன்று வருட காலப்பகுதியில் 465-மில்லியன் டொலர்கள் வழங்கப்படும்.
முன்னய கொன்சவேட்டிவ் அரசாங்கம் 2012முடிவில் வழங்க முன்வந்த தொகையின் காலப்பகுதி இந்த வருட இறுதியில் முடிவடைகின்றதெனவும் புதிய உதவி 2020 வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் சனிக்கிழமை இடம்பெற்ற NATO தலைவர்களின் மகா நாட்டில் இடம்பெற்றஆப்கானிஸ்தான் குறித்த ஒரு சிறப்பு அமர்வின் போது கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இதனை அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை வார்சோவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ராவ் ஹானியை சந்தித்த பின்னர் இத் தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.
செப்ரம்பர் 11, 2001ல் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கனடா ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தது.
2006ல் போர்த்துருப்புக்களை தென் மாகாணமான கந்தகாரிற்கு அனுப்பிவைக்க முன்னர் கனடா பில்லியன் டொலர்கள்வரை உதவி வழங்கியது.
– See more at: http://www.canadamirror.com/canada/65555.html#sthash.LCxebL13.dpuf