தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகே காங்கேசன்றை வீதியில் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில், அவரை வழிமறித்துக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம் நடத்தியோருடன் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கலந்துரையாடினார். வீதி மறியல் போராட்டம் நடத்தவேண்டாம் என்றும், அரச தலைவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வரும் வழியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன போராட்டம் நடத்தியோருடன் கலந்துரையாடினார்.தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் அரச தலைவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பில் ஆராய்து முடிவெடுக்கப்படும் என்று அரச தலைவர் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.