2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட றாகமவைச் சேர்ந்த 38 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
றாகம காவல்துறை பிரிவின் வல்பொல பகுதியில் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது
பொதுமக்களின் உதவி
குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ், அவர் இல்லாத நிலையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
தகவல் தெரிந்த பொதுமக்கள் பின்வரும் எண்களில் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: பொறுப்பதிகாரி, றாகம 2 — 0718591604 பொறுப்பதிகாரி, குற்றப்பிரிவு — 0719627561












