Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லக்ஷ்மண விரதத்தின் சிறப்பு!

June 17, 2021
in News, ஆன்மீகம்
0
அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார். லக்ஷ்மணஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார். அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை 1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும் 2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும் 3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர்? அண்ணா நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவி யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார் லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும் என்பது எம் கருத்து..! ஸ்ரீ ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே, ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் சொல்வது புண்ணியமே..! http://Facebook page / easy 24 news
Previous Post

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

Next Post

திரிஷாவிடம் ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்

Next Post
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட நடிகை திரிஷா சிறைப்பிடிப்பு

திரிஷாவிடம் ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures