Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களைக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா?

May 19, 2020
in News, Politics, World
0

சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றி விழாவை நடத்துவது நியாயமா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

“மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றதை அரச படைகள் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கெள்ள முடியாது. மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளைக் காரியாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்டத் தலைவர் பிருந்தாபன் தலைமையில் நடைபேற்றது. அங்கு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தி தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பல மக்கள் பிரதிதிகள் இராணுவத்தினரின் சோதனை நிலையங்களில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காகச் சென்றதைத் தடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும்.

இதேவேளை, செம்மணியில் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்றமைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்டவர்களைத் தனிமைப்படுத்த முயற்சித்தமையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகத்தில் இல்லாத நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு நாளை (இன்று) நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிவிழாவை நடத்துவது நியாயமா?

ஆனால், உயிர்நீத்த எமது உறவுகளை நினைவுகூர இந்த அரசால் தடை ஏற்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்க முடியாது” – என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.கஜதீபன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வாலிபர், மாதர் முன்னணிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Previous Post

கொரோனாவால் கடற்படையினர் 545 பேர் பாதிப்பு!

Next Post

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா!

Next Post

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures