Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20ஆவது திருத்தத்தை எதிர்த்துள்ள ஐ. நா

September 15, 2020
in News, Politics, World
0

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் நேற்று ஆரம்ப உரையை ஆற்றும்போது அவர் இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மிச்செல் பச்லெட் அம்மையார் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“20ஆவது திருத்தத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன அமைப்புக்களின் சுயாதீனத் தன்மை பறிபோகும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. அந்த உறுதிமொழிகளை நிராகரித்தே இலங்கை செயற்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இலங்கையில் தெரிவாகியுள்ள புதிய அரசு மறுத்து வருவது குறித்து நான் கவலைப்படுகின்றேன்.

30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது.

அத்துடன் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தில் வரைவில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்ககள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் இதுவும் ஐ.நாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதாகவே அமையும்.

இலங்கையில் படுகொலைகளில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜண்டுக்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுத்துள்ளார்.

முக்கிய சிவில் நிர்வாகத் துறைகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகையவா்கள் தமது கடந்த காலக் குற்றங்கள் தொடா்பான விசாரணைகளின்போது பொலிஸ் மற்றும் நீதித் துறையில் தலையீடு செய்யும் சந்தா்ப்பம் ஏற்படலாம்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவா்கள், அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தணிகள் ஆகியோர் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஏற்படுவதற்கு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழல் ஏற்பட வேண்டும். இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை அதிக கவனம் செலுத்தும்” – என்றார்.

Previous Post

இந்த வருடம் முடியும்வரை ரணில்தான் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்

Next Post

20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு !

Next Post

20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures