Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு – சிறீதரன் எம்.பி!

November 3, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு – சிறீதரன் எம்.பி!

எமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச்செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன்.

அதன் வெளிப்பாடாகவே உருத்திரபுரம் விளையாட்டுக்கழக இளைஞர்கள் நேர் சிந்தனையோடும், ஒற்றுமைப்பட்ட குழு மனோநிலையோடும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல்வேறு போட்டித்தொடர்களை கிரமமாக நடாத்தி வருகிறார்கள். அவர்களது இத்தகு சிந்தனைகளும் செயற்பாடுகளுமே அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிப்படிகளுக்கும், கழகத்தின் பெருவளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவ் இளைஞர்களின் செயற்பாடுகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், உருத்திரபுரம் அன்னையின் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் (2022.10.31) நடைபெற்ற அன்னையின் வெற்றிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.இராசரத்தினம் பத்மகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி தெற்கு வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள்,கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இசைப்புயலுக்கு வசந்தபாலன் நன்றி தெரிவிப்பு

Next Post

கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

Next Post
கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures