அவதூறுகளையும் மனப் புசத்தல்களையும் கண்டு நான் அஞ்சுபவனல்ல. மாறாக அவற்றை உரமாக்கி இன்னும் உயர உயர சிகரம் நோக்கிப் பயணிப்பவன்தான்.
ஆம். நான் தமிழ் தேசிய அமைப்புகளின் ஊடகப் போராளிதான். ஈழ விடுதலை சார்ந்த நிகழ்வுகளை ஒரு ஊடகவியலாளனாக பதிவு செய்பவன் என்பதால், தமிழ் தேசியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குக் குரல் கொடுப்பதால் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான்.
எங்கள் ஈழ மண்ணுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் எதனையும் செய்யாமல் மனப் புசத்தல்களை மாத்திரம் வெளிப்படுத்தும் உங்களை இப்படி புலம்ப வைத்தது என் வெற்றி. இப்படி நீங்கள் பதிவிடுவதால் உங்கள் முகம்தான் வெளிக்கும்.
சருகுப் புலி என்றும் நீங்கள் யாரை அவமதிக்கிறீர்கள். சருகுப் புலி என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஆட்கள்தான். நீங்கள் அப்படியான குழுத்தானா?
தமிழ் தேசியத்தின் வழி நின்று பேசவும் செயற்படவும் எழுதவும் முடிந்தவன் நான். தாயகத்திற்குச் சென்றும் என் கடமைப் பணிகளைச் செய்பவன் நான். என் ஏனிகளாக நீங்கள் வீசும் ஒவ்வொரு கற்களும் மாறும்.
தமிழ் தேசிய ஊடகப் போராளியாக எங்கள் தேச மண்ணுக்கான பணி தொடரும்.
இந்தத் தருணத்திலும் என் தோள்களைப் பற்றி நிற்கும் தோழமைகளை அன்புடன் தழுவுகிறேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை












