Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

January 15, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன.

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும் அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும்.

அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர்.

சர்­வ­தேச நீதி­மன்ற வழக்கு விசா­ரணை

காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன.

இவ்­வ­ழக்கில் தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார்.

இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர்.

பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள் தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர்.

இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார்.

ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார்.

இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர்.

தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார்.

Previous Post

பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு 4 இலட்சம் டொலர் வழங்க ட்ரம்புக்கு உத்தரவு

Next Post

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures