Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

January 15, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கலால் துறை, ஜனவரி 22-ம் தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மதுபான கடைகளுக்கும் அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலில் ஜன.22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனை முன்னிட்டு, ஜன.11-ம் தேதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், ஜன.22-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்கு இணங்குவதை உறுதி செய்யவும்” என்று உத்தரப் பிரதேச கலால் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அசாம்: ஜனவரி 22-ம் தேதி மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடைவிதித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவொன்றில் அவர் கூறியது: “இன்று நடந்த அசாம் அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் ஜன.22-ம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீராம் லல்லா விரஜ்மான் பிரதிஷ்டையை முன்னிட்டு அன்று மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, ஜன.22-ம் தேதி மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுப் பங்களிப்பின் மூலம் பின்தங்கியவர்களுக்கும் பிரசாதம் கிடைக்க வழிசெய்யும் வகையில் ஜன.22-ம் தேதி அனைத்து பெரிய கோயில்கள் மற்றும் குருத்வார்களில் பிரசாதம் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்தப் பிரசாதங்களில் உத்தராகண்டின் சிறுதானியங்கள் சேர்க்கப்படுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: ஜன.22-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அரசின் இந்த முடிவினை கட்டாயம் நடைமுறைப்படுத்தும் படி மாநில கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

Previous Post

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

Next Post

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

October 3, 2026
பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

October 3, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

October 3, 2026
நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

October 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures