Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

October 23, 2021
in News, Sri Lanka News
0
வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

சிறைக்கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரிசமமாக நடத்தும்படியும் கோரி வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலர் இன்று (23) பிற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு  தீர்வு கிடைக்காவிட்டால் சாகும்வரையில் உண்ணாவிரதம் போராட்டமொன்றை முன்‍னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தபோது, வெலிக்கடை சிறைச்சலை முன்றலுக்கு அம்புயலன்ஸ் வாகனமொன்றும் வந்து நிறுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையின் வாசல் காவலில் வழமைக்கும் அதிகமான சிறைச்சாலை அதிகாரிகள்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் அங்கு சற்று பரபரப்பு மிக்க சூழல் காணப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுமார் 20 வரையிலான சிறைக்கைதிகள் சிலர் பொரள்ளை கெம்பல்  மைதானத்திற்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கக்கூடிய சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூரைக்கு மேல் ஏறியிருந்த  குறித்த  சிறைக்கைதிகள் தமது கைகளில் பதாகைகள் மற்றும் கறுப்பு ,சிவப்பு நிறத்திலான கொடிக‍ளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாகைகளில், சிறைச்சாலை அதிகாரிகள் சிறை கைதிகளை நசுக்கி அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் வஞ்சகமான செயற்பாடுகள் குறித்து நாட்டின் தலைவர் மற்றும் மக்களது கண்கள் திறக்கட்டும் என்றும்,  ஜனாதிபதியே! சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளான எங்களுக்கு வேறுபாடு எதுவும் காட்டாமல் சரிசமமாக நடத்தும்படியும், சகல சிறைக் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும்படியும் அந்த பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வ‍ரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் ஏந்தியிருந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இது முடிவல்ல ஆரம்பம் | ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்

Next Post

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

Next Post
டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

October 15, 2026
2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

October 15, 2026
பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

October 15, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் | நவநீதம் நவி பிள்ளை

October 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures