Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

October 15, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், இந்த வருடம் ஈட்டி எறிதல் உலக சம்பியனுமான ருமேஷ் தரங்க பத்திரகேவின் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு பங்களாராக தேசத்தின் முன்னணி பன்முக நிறுவனக் குழுமமான சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CIC Holdings PLC) கைகோர்த்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுக்க இலக்கு வைத்துள்ள ருமேஷின் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இக் கூட்டாண்மை அமைந்துள்ளது.

இந்தக் கூட்டாண்மை ஒரு சாதாரண விளையாட்டு அனுசரணை என்பதற்கு அப்பால் சர்வதேச அரங்கில் மிக உயர்ந்த நிலையை எட்டுவதற்கு தேவையான பல வருடப் பயிற்சி, சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுடன் ருமேஷிற்குப் பக்கபலமாக நிற்பதையே வெளிப்படுத்துகிறது.

ருமேஷ் தரங்கவின் உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுப் பங்காளராக, 2028 ஒலிம்பிக் போட்டியை நோக்கிய அவரது முன்னேற்பாடுகளுக்கான ஊட்டச்சத்து, உடற்தகுதி மற்றும் ஒட்டுமொத்த நலன்களை சிஐசி ஹோல்டிங்ஸ் பொறுப்பேற்று, ‘தேசத்தின் கனவுக்கு’ பலம் சேர்க்கவுள்ளது.

இந்த நிலையில், நடப்பு பருவத்தில் (2026) சர்வதேச அளவில் ஈட்டி எறிதலில் முன்னணி வீரராகப் பரிணமித்துள்ள ருமேஷ் தரங்க, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் சம்பியன்ஷிப் போட்டியில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் இலங்கையின் புதிய தேசிய சாதனையையும் நிலைநாட்டினார்.

மேலும் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க, கடந்த மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான டயமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஹங்கேரியில் நடைபெற்ற அங்குரார்ப்பண உலக மெய்வல்லுநர் அல்டிமேட் சம்பியன்ஷிப்பிலும் சம்பியன் பட்டம் வென்ற அவர், ஜப்பானில் நிறைவடைந்த  20ஆவது ஆசிய விளையாட்டு விழாவிலும் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்தார். 

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக விவசாயம், சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்பு போன்ற துறைகளின் ஊடாக இலங்கை மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள சிஐசி ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஒரு தேசிய கனவைச் சுமந்து செல்லும் ஒரு விளையாட்டு வீரருக்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது.

இந்தக் கூட்டாண்மை குறித்து சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

‘பல தலைமுறைகளாக இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும், சமூக முன்னேற்றத்திலும் சிஐசி ஹோல்டிங்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. ருமேஷுடனான இந்தக் கூட்டாண்மை அந்த அர்ப்பணிப்பின் இயல்பான தொடர்ச்சியாகும். 2028 ஒலிம்பிக்கை நோக்கிய அவரது பயணம் ஒழுக்கம், மன உறுதி மற்றும் அசாத்தியமான இலட்சியத்தை அடையும் துணிச்சலைக் பிரதிபலிக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு மேடையில் அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அவரது ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்’ என்றார்.

சிஐசி ஹோல்டிங்ஸ் உடனான இந்தக் கூட்டாண்மை குறித்து ருமேஷ் தரங்க கருத்து தெரிவிக்கையில்,

‘சர்வதேச அளவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் பெருமையுடன் சுமக்கும் ஒரு பொறுப்பாகும். லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் நோக்கிய பயணத்திற்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிஐசி ஹோல்டிங்ஸ் நிறுவனம் எனது ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுப் பங்காளராக இணைந்திருப்பது எனக்கு பெரிய பலமாகும். இலங்கைக்கு வரலாற்றுச் சாதனை ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதே எனது கனவு. அந்தக் கனவை நம்பி, இந்தப் பயணத்தில் என்னோடு கைகோர்த்துள்ள சிஐசி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்’ என்றார்.

இக்கூட்டாண்மையின் ஊடாக, 2028 ஒலிம்பிக் போட்டியை நோக்கிய ருமேஷ் தரங்கவின் நீண்டகாலப் பயணத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுடன், ஒரு வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சிகளை இலங்கை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்க சிஐசி ஹோல்டிங்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Previous Post

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

Next Post

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

Next Post
சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

சீ ஹோக்ஸ் அணியை 2 - 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

October 16, 2026
சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

October 16, 2026
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு தனிச் சிறை: மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

October 16, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடுகின்றனர் | அருட்தந்தை சத்திவேல்

October 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures