Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

October 16, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் நடத்திவரும் 10 பிரதான கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 23 ஜூலை 11ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 15ஆம் திகதிவரை 9 வார இறுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற 45 முதல் சுற்றுப் போட்டிகளில் எதிர்பார்த்த பரபரப்பு காணப்படவில்லை.

முதல் சுற்றில் பங்குபற்றிய பெரும்பாலான கழகங்கள் சுப்பர் சிக்ஸுக்கு தகுதிபெறுவதைக் குறியாகக் கொண்டே விளையாடின.

முதல் சுற்றில் தோல்வி அடையாமல் இருந்த ஒரே ஒரு கழகமான நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ், சீ ஹோக்ஸ், கலம்போ எவ்.சி., கொட்டாஞ்சேனை றினோன், பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார், நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் ஆகிய கழங்கள் அவ்வப்போது விறுவிறுப்பான போட்டிகளை தந்திருந்தன.

ஆனால், கடந்த வார இறுதியில் ஆரம்பமான இந்த அணிகள் சம்பந்தப்பட்ட சுப்பர் சிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதுடன் 2000க்கு முற்பட்ட காலப்பகுதியில் விறுவிறுப்பை தோற்றுவித்த போட்டிகளுக்கு ஒப்பானவையாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஒரு பெருங்குறை என்னவென்றால், இலங்கையில் கால்பந்தாட்டம் இல்லாமல் போய்விட்டது எனவும் உள்ளூர் போட்டிகள் எப்போது ஆரம்பமாகும் எனவும் கேள்வி எழுப்பியவர்கள், கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமான பின்னர் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தராதது வேதனை அளிக்கிறது என சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கவலை வெளியிட்டார்.

பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் போட்டிகள்.

கடந்த வாரம் நடைபெற்ற மூன்று சுப்பர் சிக்ஸ் போட்டிகளும் முழு 90 நிமிடங்களும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.

புளூ ஸ்டார் கழகத்தை முதல் சுற்றில் 9 – 1 என துவம்சம் செய்த அப்கன்ட்றி லயன்ஸுக்கு சுப்பர் சிக்ஸ் சுற்று இலகுவாக அமையவில்லை.

அப் போட்டியில் புளூ ஸ்டார் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட அப்கன்ட்றி லயன்ஸ் இறுதியில் 5 – 3 என வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் றினோன் கழகத்தை முற்றிலும் எதிர்பாராத விதமாக ரெட் ஸ்டார் வீழ்த்தியது.

இந்த இரண்டு அணிகள் சம்பந்தப்பட்ட முதல் சுற்று ஆட்டம் கோல் எதுவும் போடப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஆனால், சுப்பர் சிக்ஸ் சுற்றில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய ரெட் ஸ்டார் கழகம் 2 – 0 என வெற்றிபெற்று இந்த சுற்றுப் போட்டியில் மிகப்பெரிய தலைகீழ் முடிவை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடைபெற்ற கலம்போ எவ்சிக்கும் சீஹோக்ஸுக்கும் இடையிலான போட்டி இடிமுழக்கம், மழை காரணமாக 50ஆவது நிமிடத்தில் இடைநிறுத்தப்பட்டு 40 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தொடரப்பட்டபோது கலம்போ எவ்சி 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இவ்வாறாக சுப்பர் சிக்ஸ் சுற்று விறுவிறுப்பையும் பரபரப்பையும் தோற்றுவித்து வரும் நிலையில் இந்த வாரம் மிகவும் பரபரப்பான இரண்டாம் கட்ட சுப்பர் சிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சீ ஹோக்ஸ் – புளூ ஸ்டார்

சீ ஹோக்ஸ் அணிக்கும் புளூ ஸ்டார் அணிக்கும் இடையிலான சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பயண வழிகாட்டி

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் சுற்று ஆட்டம் 0 – 0 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இன்றைய தினம் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப் போட்டி மிகுந்த விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளில் சீ ஹோக்ஸ் அணி சற்று பலம்வாய்ந்ததாக இருக்கின்றபோதிலும் போட்டிக்கு போட்டி முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வந்துள்ள புளூ ஸ்டார் கழகம் எதிரணிக்கு பலத்த சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாளைய தினம் ரெட் ஸ்டார் கழகத்துக்கும் கலம்போ எவ்சிக்கும் இடையிலான போட்டியும் நாளைமறுதினம் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்துக்கும் றினோன் கழகத்துக்கும் இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.

Previous Post

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு தனிச் சிறை: மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

Next Post

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

Next Post
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான 'ஆஷா'

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

October 16, 2026
சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

October 16, 2026
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு தனிச் சிறை: மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

October 16, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடுகின்றனர் | அருட்தந்தை சத்திவேல்

October 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures