Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட்டிவீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றது | ஹர்ஷ டி சில்வா

January 2, 2022
in News, Sri Lanka News
0
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக ஹர்ஷத சில்வா

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாகக் கடந்த டிசம்பர் மாதம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருப்பதாகச் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணவேண்டுமெனின் மத்திய வங்கி கீழ்மட்ட அரசியல் நோக்கில் சிந்திப்பதைவிடுத்து, பொருளியல் ரீதியில் சிந்திக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, கடந்த நவம்பர் மாதம் 17.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப்பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதமாக அதிகரித்ததாகவும் நவம்பரில் 6.4 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் டிசம்பரில் 7.5 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விலைக்கட்டுப்பாடுகளுடன் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 200 ரூபா என்ற மட்டத்தில் பேணப்பட்ட போதிலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாக கடந்த டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளது.

அதுமாத்திரமன்றி உணவுப்பணவீக்கம் 22.1 சதவீதமாகப் பதிவாகியுள்ள நிலையில், இது மிகவும் உயர்வானதாகும். இந்த நெருக்கடி நிலைமை உடனடியாக சீர்செய்யப்படாவிட்டால், பணவீக்கமானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிகரிக்கும் என்று அவர் டுவிட்டர் பதிவின் ஊடாக எச்சரித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி வட்டிவீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றமை குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் ஹர்ஷ டி சில்வா, இதனூடாக வெளிநாட்டுச்செலாவணி நெருக்குத் தீர்வுகாணமுடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டுமெனின், மத்திய வங்கி கீழ்மட்ட அரசியல் நோக்கை அடிப்படையாகக்கொண்டு சிந்திப்பதைவிடுத்து பொருளியல் ரீதியில் சிந்திக்கவேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக வலியுறுத்தியிருக்கின்றார்.

மேலும் ‘வட்டிவீதங்கள் அதிகரிக்கும்போது பணத்திற்கான கேள்வி வீழ்ச்சியடையும் என்ற கோட்பாடொன்று உள்ளது. இருப்பினும் நான் அந்தக் கோட்பாட்டை நம்பவில்லை’ என்று அண்மையில் சிங்கள நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் நாணயச்சபை உறுப்பினர் சமந்த குமாரசிங்க தெரிவித்திருந்தார்.

அக்கருத்தை மேற்கோள்காட்டி மற்றுமொரு டுவிட்டர் பதிவைச் செய்திருக்கும் ஹர்ஷ டி சில்வா, ‘மிகவும் திறமையான வங்கி நிர்வாகியான நிஹால் பொன்சேகாவை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமந்த குமாரசிங்க நியமிக்கப்பட்டார்’ என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அத்தோடு அவரது நேர்காணலை முழுமையாக வாசிப்பதன் ஊடாக மத்திய வங்கிக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

திங்கள் வட்டம் பற்றித் தெரியுமா? | வெற்றிநடைபோடும் திங்கள் நட்பு வட்டம்

Previous Post

நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளி இறுதி ஆணியை அடிக்க அரசாங்கம் தயாராகிறது | சஜித் கடும் சாடல்

Next Post

தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து!

Next Post
தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து!

தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures